செயற்கை நுண்ணறிவு
அடுத்த வார்த்தையை
அருமையாக
கண்டுபிடிக்கிறது.
நான்
என் கவிதைக்கு
முதல் வார்த்தை மட்டும்
கண்டுபிடித்தால் போதும்!
இரண்டு AI
பேசிக்கொண்டது,
எனக்கு
புரியாத
மொழியில்.
ஆயிரம் ஆண்டு
நிறைவை ஒட்டி
பிறந்தநாள்
கொண்டாடியது
ஒரு AI.
அதில் ஒன்று,
மனிதர்களைப் போல
நமக்கும் மரணம்
இருந்திருக்கலாம்
என்று
பெருமூச்சு விட்டது.
AI இருக்கும்வரை
யாரும்
அனாதை இல்லை!